முருகேசு நந்தகுமார் (தொகுப்பாசிரியர்). வவுனியா: திருமதி கௌரிமனோகரி நந்தகுமார் குடும்பத்தினர், இல. 210, சிவன் கோவில் வீதி, உக்குளாங்குளம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (யாழ்ப்பாணம்;: அன்றா பிறின்ரேர்ஸ், இல. 379, கஸ்தூரியார் வீதி).
xv, 154 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
இந்நூலில் எச்.ஐ.வி. இன்னும் எங்களுடன்-இன்றே பரிசோதிப்போம், தொற்றா நோய்கள், மாரடைப்பு ஓர் அறிமுகம், பக்கவாதம் ஓர் அறிமுகம், பக்கவாதம் என்றால் என்ன? நீரிழிவு, தற்கொலை, உயர் குருதி அமுக்கமும் சிறுநீரக நோயும், ஆஸ்துமா, புற்றுநோய் ஓர் அறிமுகம், புற்றுநோய் என்றால் என்ன? காசநோய், மூட்டுவாதம், தோல் நோய்கள் பற்றிய தவறான பழைய நம்பிக்கைகளும் விழிப்புணர்வும் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 14 மருத்துவக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தெல்லிப்பழை-பன்னாலையைச் சேர்ந்த அமரர் கௌரிமனோகரி 18.10.1967இல் பொன்னம்பலம் தெய்வேந்திரன்- ஜெயமணி தம்பதியினரின் இரண்டாவது மகளாகப் பிறந்தவர். யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் 11ஆவது அணியில் கற்றுத் தேர்ந்தவர். 1997இல் வவுனியா ஆதார வைத்தியசாலையில் வைத்தியராக முதல் நியமனம் பெற்றவர். 07.02.2000 அன்று முருகேசு நந்தகுமார் என்பவரை திருணம் செய்தவர். 11.10.2016 இல் மரணமடையும் வரை வவுனியா மாவட்டத்தில் பல்வேறு மருத்துவப் பணிகளில் ஈடுபட்டவர்.