மார்கஸ் பெர்னாண்டோ. கொழும்பு : சுகாதாரக் கல்விப் பணியகம், சுகாதாரத் திணைக்களம், இணை வெளியீடு, கொழும்பு: சமூக நோய்த் தடுப்பு நிகழ்ச்சித் திட்டம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை, (கொழும்பு 10: குணரத்ன ஓப்செட் லிமிட்டெட்).
47 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×18 சமீ.
வரலாறு, உலகளாவிய நிலை, எய்ட்ஸ் என்றால் என்ன? எச்.ஐ.வி. யுடனான தொற்று நோயின் இயற்கை வரலாறு, எய்ட்ஸ் பரவும் முறை, எய்ட்ஸ் வைரஸ் பரவாதுள்ள முறைகள், எய்ட்ஸ் வைரசின் ஆபத்திற்குப் பெருமளவு ஆளாகுபவர்கள், எய்ட்ஸ்சின் அறிகுறிகளும் அடையாளங்களும், எச்.ஐ.வி. க்கான பிறபொருளெதிரி திரைப் பரிசோதனை, எய்ட்சும் தீவிர நிலைகளும், எய்ட்சும் கருத்தரிப்பும், எய்ட்சும் தாய்ப்பாலூட்டலும் எய்ட்சும் குழந்தைகளும், எய்ட்சும் இரத்ததானமும், இரத்ததானம் செய்யும்போது நினைவில் வைத்திருக்க வேண்டிய குறிப்புகள், எய்ட்ஸ் பரவுதலை எவ்வாறு தடுக்கலாம்? எய்ட்ஸ்சுக்கான சிகிச்சை, கிருமியழித்தலும் தொற்றுத் தடையாக்கலும், எச்.ஐ.வி. தொற்றுநோய்த் தடை, சுகாதார கவனிப்பு அமைப்புகளில் மனித நிர்பீடனக் குறைபாட்டு வைரசு (எச்.ஐ.வி.) பரவுதல், சுகாதார கவனிப்பு நிலையங்களில் நோய் செலுத்துகை வழிகள், சுகாதார ஊழியர்கள், எய்ட்ஸ் நோயைத் தடுப்பதற்கு சுகாதார ஊழியர்கள் உதவக்கூடிய வழிகள், எய்ட்ஸ் நோய்த் தடுப்பில் சுகாதாரக் கல்வியின் பயன், ஆலோசனை வழங்கல், நான்கு முக்கிய வகை தேவைகளை ஆலோசனை எதிர்கொள்கின்றது, யாருக்கு ஆலோசனை வழங்குவது? ஆலோசனைக்குத் தேவைப்படும் திறனாற்றல், உடற்சேர்க்கையும் எய்ட்சும் பற்றிய சிபார்சுகள், எய்ட்ஸ் பற்றிய அடிப்படைத் தகவல், வைரசும் தடைக்காப்புறுதி முறையும் ஆகிய தலைப்புகளில் இந்நூல் விளக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 40333).