இ.சிவசங்கர். யாழ்ப்பாணம்: சுகாதாரக் கல்விசார் தயாரிப்பலகு, சமுதாய மருத்துவத்துறை, மருத்துவபீடம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், ஆடியபாதம் வீதி, 1வது பதிப்பு, 2005. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி).
iv, 47 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×13 சமீ.
யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட நான்காம் ஆண்டு மாணவர்களின் பரீட்சைத் தேவைக்காகத் தயாரிக்கப்பட்ட மருத்துவத் தகவல் நூல். இதில் நீரிழிவு நோய் ஓர் அறிமுகம், நீரிழிவு நோயின் வகைகளும் அதன் அறிகுறிகளும், நீரிழிவு நோயை நிர்ணயம் செய்தலும் அதற்குரிய பரிசோதனைகளும், நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது எப்படி?, நீரிழிவு நோயினால் ஏற்படக்கூடிய பாரதூரமான விளைவுகள், நீரிழிவு நோயின் தாக்கத்தினை எவ்வாறு குறைக்கலாம்?, நீரிழிவு நோயாளியும் உணவும், நீரிழிவு நோய் உளவியல் பார்வையில் ஆகிய எட்டு அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. வைத்திய கலாநிதிகள் ஆர்.சுரேந்திரகுமாரன், எஸ்.சிவன்சுதன் ஆகியோரின் மேற்பார்வையில் மருத்துவபீட நான்காம் ஆண்டு மாணவர் இ.சிவசங்கர் அவர்களால் இந்நூலாக்கம் மேற்கொள்ளப்பெற்றுள்ளது.