கந்தசாமி அருளானந்தம், ஞானச்செல்வம் கிஷோர்காந்த். லண்டன்: இ.நித்தியானந்தன், இரட்ணம் அறக்கட்டளை, 179, Norval Road, Wembley HA0 3SX, 1வது பதிப்பு, 2018. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496 யு, திருமலை வீதி).
vi, 32 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-35782-0-4.
நீரிழிவைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதற்கு வேண்டிய தகவல்கள் பல இந்நூலில் அடங்கியுள்ளன. இதனை கட்டுப்படுத்தத் தவறினால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. நீரிழிவு பற்றிய பார்வை என்ற முதலாவது பகுதியில், நீரிழிவு பற்றிய ஓர் அறிமுகம், நீரிழிவு பற்றிய கண்ணோட்டம், நோயின் தன்மையும் அதன் இயற்கைப் போக்கும், வெளிக்காட்டும் குணங்களும் வெளிக்காட்டாக் குறிகளும், நீரிழிவுப் பராமரிப்பும் தடுப்பு முறைகளும் ஆகிய நான்கு இயல்களும், சமூகப் பார்வையில் நீரிழிவு என்ற இரண்டாவது பகுதியில், நீரிழிவும் உணவு முறையும், நீரிழிவும் உடற் பயிற்சியும், நீரிழிவும் உளமும், நீரிழிவும் சவால்களும், நீரிழிவும் இதர தகவல்களும் (ABCDEFGH அணுகுமுறை, நீரிழிவும் மருந்துவகைகளும், கால அட்டவணை, இன்சுலின் பயன்படுத்துவது பற்றி) அடங்கியுள்ளன. நூலாசிரியர்கள் இருவரும் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் விரிவுரையாளர்களாவர்.