மலர்க் குழு. யாழ்ப்பாணம்: யாழ். நீரிழிவு அசோசியேஷன், இல 39, சோமசுந்தரம் அவென்யூ, 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி).
(4), 48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் 2016ஆம் ஆண்டு நீரிழிவை வெற்றிகொள்வோம் என்ற தொனிப்பொருளில் அறிமுகப்படுத்தப்பட்ட நீரிழிவு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஓரங்கமாக சர்வோதயம், யாழ். லயன்ஸ் கழகங்களின் அனுசரணையுடன் வெளியிடப்பட்டுள்ள இந்நூல் வைத்தியர்களின் கட்டுரைகளைக் கொண்டுள்ளது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த ஒன்றிணைவோம் (இ.சுரேந்திரகுமார்), என்று தணியும் இந்த சீனியின் மோகம் (எம்.அரவிந்தன்), நீரிழிவு நோயைத் தடுப்பது எப்படி? (எஸ்.சிவன்சுதன்), நீரிழிவும் இதய நோய்களும் (பூ.லக்ஷ்மன்), ஆரோக்கியத்தைப் பரிசளிக்கும் மரக்கறி வகைகளும் பழங்களும் (பொ.ஜெசிதரன்), பெறுமதியான உணவுகள் (பொ.ஜெசிதரன்), நீரிழிவு நோயாளர்களின் கவனத்திற்கு (எஸ்.டி.எஸ்.சந்திரகுமார்), நீரிழிவும் சிறுநீரக நோயும்(எம்.கஜந்தினி), நீரிழிவு நோயும் உடற்பயிற்சியும் (செ.அறிவுச்செல்வன்), கண்ணும் நீரிழிவும் (எஸ்.டி.எஸ்.சந்திரகுமார்), நீரிழிவு நோய்க்கு மூலிகை மருத்துவம் (விவியன் சத்தியசீலன்), நீரிழிவு நோயாளர்களில் ஏற்படும் வாய்க்குழி சம்பந்தமான நோய்கள் (ஜி.குமார் லோஜினி), நீரிழிவுள்ள தாய்மார்களுக்குச் சில தகவல்கள் (எஸ்.சுதாகரன்), நீரிழிவினைக் கட்டுப்படுத்த யாழ் நீரிழிவு அசோசியேஷனின் செயற்பாடுகள் (தி.மைக்கல்) ஆகிய கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.