பொன். இராமநாதன். யாழ்ப்பாணம்: வைத்திய கலாநிதி பொன். இராமநாதன், சிரேஷ்ட விரிவுரையாளர், சித்த மருத்துவத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கைதடி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2008. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சாயி ஓப்செற் பிரின்டர்ஸ், கோண்டாவில்).
(12), 78 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ.
ஆதி மனிதனின் மருத்துவ அறிவு, உலகின் வேறுபட்ட மனிதகுல நாகரிகங்கள், குமரிக்கண்டம் (குமரிக்கண்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், குமரிப் பூண்டு), சிந்துவெளி நாகரிகம் (மருத்துவக் கலை), திராவிடர் ஆரியர் என்னும் சொற்பதங்கள் (திராவிடர், ஆரியர், திராவிடரும் ஆரியரும் இன அடிப்படையில்), தமிழ் மருத்துவக்கலை வரலாறும் சித்த ஆயுள்வேத மருத்துவ முறைகளின் வளர்ச்சியும், உலகில் மருத்துவ வளர்ச்சி, தமிழ் மருத்துவக் கலை வரலாறு (இயற்கை நெறிக்காலம், அறநூற்காலம், சித்தர் காலம், தமிழ் மருத்துவம் நலிவுற்ற காலம், தற்காலம்-அறிவியற்காலம்), சித்த ஆயுள்வேத மருத்துவ முறைகளின் வளர்ச்சி, ஆயுர்வேத மருத்துவத்திற்கும் வேதங்களுக்கும் இடையில் உள்ள தொடர்பு, சித்த ஆயுள்வேத வேறுபாடுகளில் சில, ஈழத்தில் சித்த மருத்துவ வளர்ச்சி ஆகிய தலைப்புகளின்கீழ் இந்நூலில் சித்த மருத்துவத்தின் தோற்றமும் வளர்ச்சியும் விளக்கப்பட்டுள்ளது. ஆசிரியரால் கலாநிதிப் பட்டத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேட்டின் ஒரு பகுதியான இது, யாழ். பல்கலைக்கழக சித்தமருத்துவ மாணவர்களுக்கான துணைப்பாடநூலாகவும் விளங்குகின்றது. (இந்நூல் சுன்னாகம்; பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24933).