13504 சித்த மருத்துவம் 1996/1997.

P.ஸ்ரீகணேசன், மு.செல்வமலர் (இதழாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ மாணவர் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1997. (யாழ்ப்பாணம்: கணாதீபன் அச்சகம்).

(16), 70 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×19 சமீ.

யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ மாணவர் ஒன்றியத்தால் சித்த மருத்துவம் இதழ் 1985 இல் இருந்து வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆரம்பகால ஆசிரியர்களாக எஸ்.எல்.சிவசண்முகராஜா, பி.வி. விமலதாஸ் போன்றோர் விளங்கினார்கள். சித்தமருத்துவம், சித்த பயன்கள், சித்த மருத்துவ முறைகள், சித்தர்கள் , யோகாசனம் போன்ற பல சித்த மருத்துவம் சார்ந்த விடயங்களை தாங்கி இந்த இதழ் வெளிவந்தது. இவ்விதழில் ஆசிச் செய்திகள், வாழ்த்துச் செய்திகள், அறிக்கைகள் ஆகியவற்றுடன், நலமாக வாழ நாட வேண்டியதும் நாட்டப்பட்ட வேண்டியதுமான மூலிகைத் தாவரங்கள் (லோஜனா சிவகுருநாதன்), குழந்தை வளர ஏணிப்படிகள் (வி.அனவரதன்), மல்லாகம், துன்னாலை, கோப்பாய், மீசாலை, திருநெல்வேலி ஆகிய கிராமங்களில் மருத்துவ முக்கியத்துவமுடைய மூலிகைகளின் பரம்பல் பற்றி ஓர் ஆய்வு (வி.சத்தியசீலன்),கிராமங்கள் தோறும் திரட்டப்பட்ட மூலிகைகளின் மருத்துவச் செய்கைகளின் எண்ணிக்கையும் வீதமும், கருக் காலத்தில் மருந்துகள் (P.ஸ்ரீகணேசன்),ஆஸ்மா (Bronchial Asthma) நோயாளருக்கு சில குறிப்புகள் (ஸ்ரீரஞ்ஜனி சிவபாலன்), கர்ப்பிணிகளுக்கான கிளினிக் (Anti Natal Clinic) நடைமுறைகளும் நன்மைகளும் (ஜெ.ஸ்ரீஸ்கந்தராஜா), AIDS (த.கமலாதேவி), ஏற்புவலி (தனுர்வாதம்) (க.சிவாதரன்),வேம்பின் மருத்துவப் பயன்கள் (ந.அன்பரசி), மூலவியாதி (ந.சொரூபி) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39240).

ஏனைய பதிவுகள்

Learn Your finances

Content Could you Enjoy On line Blackjack At no cost?: A Night In Paris bonus game Jim Cramer’s Real cash: Sane Investing An insane World