ஆ.கனகரத்தினம்,. கொழும்பு: சிலோன் பிரின்டர்ஸ் லிமிட்டெட், பார்சன்ஸ் வீதி, கோட்டை, 1வது பதிப்பு, ஜுலை 1949. (கொழும்பு: சிலோன் பிரின்டர்ஸ் லிமிட்டெட்).
18 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
இது யாழ்ப்பாணம் சித்த மருத்துவப் பேரவையில் கொழும்பு ஆயுர்வேதக் கல்லூரி மருத்துவ ஆசிரியர் ஆ.கனகரத்தினம் அவர்கள் 24.7.1949இல் ஆற்றிய பேருரையின் எழுத்து வடிவமாகும். இவ்வுரை ஆயுள்வேதம் என்றால் என்ன? சித்த மருத்துவத்தின் சிறப்பு, மருத்துவச் சித்தர்களின் மாண்பு, சித்த மருத்துவச் சீர்திருத்தம் ஆகிய நான்கு பிரிவுகளில் ஆற்றப்பட்டிருந்தது. ஆசிரியர் சித்த மருத்துவமென்பது ஆயுள்வேதத்தின் வழித்தோன்றியதென்ற தனது முன்னைய கொள்கையை மறுதலித்து, மேலதிக ஆய்வின் பயனாக சித்த மருத்துவமும் மற்றைய மருத்துவங்களும் தனித்தனிச் சிறப்புடையன என்பதையும் இங்கு வலியுறுத்தியிருக்கிறார். ஆயுள்வேதமென ஒன்றில்லை-சித்த மருத்துவமே உள்ளதென்ற உண்மையை மருத்துவச் சித்தர்களின் வாயிலாக இவ்வுரையில் எடுத்துரைக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10733).