யோ.இ.கிறிஸ்ரோபர் (பதிப்பாசிரியர்). மட்டக்களப்பு: மன்று வெளியீடு, இல. 16, புனித மிக்கேல் வீதி, 1வது பதிப்பு, 1999. (மட்டக்களப்பு: ஈஸ்ரன் கிராபிக்ஸ்).
iv, 40 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 50., அளவு: 21×14 சமீ.
விஷக்கடி வைத்திய ஏட்டுச்சுவடியின் அச்சு வடிவம் இது. வீ.சு.கதிர்காமத்தம்பி, திருமதி யோகா புவனேந்திரன் ஆகியோரால் பிரதிபார்க்கப்பட்டது. பாம்பு மற்றும் பிற விஷஜந்துக்களின் விஷக்கடி வைத்தியம் பற்றி இந்நூல் பேசுகின்றது. மட்டக்களப்பு மாவடி முன்மாரி வட்ட விதானையார் திரு. செ.திருஞானச்செல்வம் அவர்களால் வழங்கப்பட்ட ஏட்டுப்பிரதியிலிருந்து இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21057).