13507 மூலிகை உணவு மருத்துவம்.

சே.சிவசண்முகராஜா. யாழ்ப்பாணம்: சே.சிவசண்முகராஜா, 199/1, கில்னர் ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜுலை 2004. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி).

(6), 32 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 20×14.5 சமீ.

மூலிகை உணவும் யோகாசனமும் நோய் வராமல் காப்பதுடன் நோய் வந்தால் அந்நோயைக் குணப்படுத்தும் மருந்தாகவும் செயற்படுகின்றன. இந்நூலில் அத்தகைய மூலிகைத்தன்மை பொருந்திய உணவுப்பொருட்கள் பற்றி 21 கட்டுரைகளின் வழியாக ஆசிரியர் விளக்கமளிக்கின்றார். வாழவைக்கும் வாழைக்கனி, மாம்பழம் ஒரு ஞானப்பழம், மூளை வளர்ச்சிக்கு வல்லாரை, கொளுத்தவனுக்குக் கொள்ளுக் கொடு, இளைத்தவனுக்கு எள்ளு, வாழைத்தண்டுபோல் உடம்பு, வாயவியல் போக்கும் அகத்தி, வெறுங்கறிவேப்பிலைதானா? இரைப்பைக் குடற்புண் நீக்கும் பிரண்டை, மூலநோய் போக்கும் பிள்ளைக் கற்றாளை, கிழங்குகளிலே சிறந்த கரணை, முடக்குவாதத்துக்கு முடக்கொற்றான், தாய்ப்பால் பெருக்கும் வள்ளைக்கீரை, ஊர் முதலி முருங்கை, நீரிழிவைக் கட்டுப்படுத்தும் சிறுகுறிஞ்சாய், கசக்கும் பாகற்காய் இனிப்பான செய்தி, குரக்கனை மறந்துவிட்டோம், இருமலுக்கு இரண்டு மூலிகைகள், மலச்சிக்கலா?, இலைக்கஞ்சி, சில குறிப்புகள் ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்தமருத்துவத்துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றியவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37183).

ஏனைய பதிவுகள்