நாகேந்திரம் நாராயணன். தெகிவளை: நாராயணன் அசோசியேட்ஸ், 54C, ஸ்கூல் அவென்யூ, ஸ்ரேசன் ரோட், 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: ஹரே பிரின்டர்ஸ், இல.36, ஸ்ரேசன் வீதி).
(12), 153 பக்கம், மாதிரி வீடுகளின் வரைபடங்கள், விலை: ரூபா 700.00, அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-7322-01-08.
இந்நூலின் நோக்கம் நிர்மாணிப்பு வேலைகளில் மக்கள் முகம்கொடுக்கும் சிரமங்களையும் அநாவசியமாக ஏற்படுத்தப்படும் நட்டங்களையும் நடைமுறையில் அவதானித்து அவற்றிற்குரிய திறமையான ஆலோசனைகளை வழங்குவதாகும். வீடுகள் நிர்மாணிக்கப்படும் நடைமுறைக் கண்ணோட்டங்கள், வீடுகள் அமைக்கும் தொழில்நுட்ப ஆலோசனைகள், வீடுகள் நிர்மாணிக்கப்படும் தொழில்நுட்ப ஆலோசனைகள், கட்டுமான பொருட்களும் அவற்றின் தரங்களும், வடிவமைக்கப்பட்ட வீட்டின் மாதிரி வரைபடங்களும் விபரங்களும், கட்டுமான வேலை தொடர்பான தமிழ்-ஆங்கில அகராதி (கலைச்சொற்கள்) என்பன இந்நூலின் ஆறு அத்தியாயங்களாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62055).