சந்திரசிரி குடாகமகே. பேராதனை: பூச்சியியல் பிரிவு, மத்திய விவசாய ஆராய்ச்சி நிலையம், விவசாயத் திணைக்களம், 1வது பதிப்பு, 1999. (பேராதனை: விவசாயத் திணைக்கள அச்சகம்).
12 பக்கம், விளக்கப்படங்கள், கருத்தோவியங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×20 சமீ.
கேலிச்சித்திர/கருத்தோவியங்களின் உதவியுடன் விவசாயக்கல்வியை பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள நூல். இலங்கை விவசாய ஆராய்ச்சிக் கொள்கைக் கவுன்சிலின் 12/39/33ஆம் இலக்க திட்டத்தின் உதவியுடன் மத்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் பூச்சியியல் பிரிவின் தொழில்நுட்ப ஆலோசனைகளுடன் கண்ணோறுவை கட்புல செவிப்புல நிலையத்தினால் தயாரிக்கப்பட்டது. வேம்பு (Azadirachta indica, Neem) இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் வளரும் மிகவும் பயனுள்ள ஒரு மரம். இதன் மருத்துவ பண்புகள் கருதி, ஒரு மூலிகை என்றும் வகைப்படுத்தலாம். வேப்ப மரம் நன்றாக வளர்ந்து நிழல் தர வல்லது. அதன் இலைகள் கிருமிகளை அழிக்கும் அல்லது அணுகவிடா தன்மை கொண்டவை என்று கருதப்படுகின்றது. இந்நூலில் வேம்பை விவசாயத்தில் பீடைநாசினியாக எவ்வாறு பயன்படுத்தலாம் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. வேம்பு தொடர்பான மற்றொரு சுவாரசியமான செய்தி யாதெனில், 1995ல் ஐரோப்பிய காப்புரிமைக் கழகம் வேம்பு தொடர்பான காப்புரிமையை அமெரிக்க ஐக்கிய நாடுகள் விவசாயத்துறைக்கு வழங்கியிருந்தது. பின்னர் இந்திய அரசாங்கம் காப்புரிமை வழங்கப்பட்ட வேம்பு தொடர்பான பயன்பாடும் செயற்பாடும் ஏற்கெனவே 2000 ஆண்டுகளாக இந்தியாவில் நடைமுறையில் இருப்பதாகக் கூறி இதை எதிர்த்தது. கி.பி. 2000ல் இந்தியாவிற்கு சாதகமாக ஐரோப்பிய காப்புரிமைக் கழகம் தீர்ப்பளித்தது.