சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறை. யாழ்ப்பாணம்: சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இணை வெளியீடு, யாழ்ப்பாணம்: வடமாகாண சுகாதார அமைச்சு, 1வது பதிப்பு, மாசி 2016. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
viii, 67 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
2016இல்நடைபெற்ற மாகாண ஆரோக்கிய விழாவின்போது வடமாகாண அரசு யாழ். பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்திய சமையல் போட்டியில் காட்சிப்படுத்தப்பட்ட ஆரோக்கியமான புதிய உணவுகளை தயாரிக்கும் வழிமுறைகளைக் கொண்ட நூல் இது. ஆரோக்கிய உணவு அனைவருக்கும் பொதுவானது என்ற அறிமுகக் கட்டுரையுடன் தொடங்கும் தயாரிப்பு முறைகளில் ‘பிரதான உணவு’ என்ற பிரிவில் பலவகை தானியங்கள் தோசை, முருங்கை முட்டை வறுவல், தக்காளி சாதம், மரக்கறி ரொட்டி, ஜீவ அமிர்த பிட்டு, ஆரோக்கிய அமிர்த கஞ்சி, கோளிபிளவர் உப்புமா, காதாம்பரி ஊத்தப்பமும் அரையலும் ஆகிய எட்டு உணவுப் பதார்த்தங்கள் தயாரிக்கும் முறைகள் தரப்பட்டுள்ளன. ‘சிற்றுண்டி-அசைவம்’ என்ற பிரிவில் மீன் ரொட்டி, மரக்கறி முட்டை லட்டு, மீன் மசாலா வடை, மீன் கரா, மீன் போண்டா, மீன் பஜ்ஜி, முட்டைசேர் பயற்றம் உருண்டை, மீன் கேக், மீன் பான்கேக், இறால் தட்டை வடை, மீன் கபேஜ் ரோல் ஆகியனவும் ‘சிற்றுண்டி சைவம்’ என்ற பிரிவில் காளான் வடை, பாகற்காய் பச்சடி, கறுவா ரோல், புரத அடையும் மிளகாய்ப் பொடியும், அறுதானிய மா, சோள மா அல்வா, பேரீச்சம்பழ புடிங், முள்ளங்கி கட்லட், ஆரோக்கிய சைவ கலவை பஜ்ஜி என்பனவும், ‘கேக் வகை’ களில் பழக்கேக், கரட் கேக், சண்பிளவர் ஒயில் கேக், போன்ஸ் கேக் ஆகியனவும், ‘பானங்கள்’ என்ற பிரிவில் செம்பரத்தம்பூ ஜுஸ், உற்சாகமூட்டி பானம், பப்பாசிப்பானம், கூட்டுப்பழக்கலவை சர்பத், அன்னாசி பப்பாசிப்பழச் சாறு, கற்றாளை ஜுஸ், சாரங்கி (நவரசம்) ஆகிய பானங்களும் தயாரிக்கும் முறைகள் விளக்கப்பட்டுள்ளன.