சமுதாய குடும்ப மருத்துவத்துறை. யாழ்ப்பாணம்: சுகாதாரக் கல்விசார் பொருட்கள் தயாரிப்பலகு, சமுதாய குடும்ப மருத்துவத்துறை, மருத்துவபீடம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், ஆடியபாதம் வீதி, இணை வெளியீடு: யாழ்ப்பாணம்: வடமாகாண சுகாதார அமைச்சு, 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
60 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
ஆரோக்கியமான பாரம்பரிய உணவுவகைகள் தவிர்க்கப்பட்டு, விரைவு உணவுகளால் அவை பிரதியீடு செய்யப்படும் இக்காலகட்டத் தமிழ்ச் சமூகத்தில் போஷாக்கு மிக்க சிறுதானியங்களான தினை, வரகு, சாமை, குரக்கன், போன்றவற்றையும் அவரை வகைகளான பயறு, உழுந்து மற்றும் கிழங்கு வகைகளான இராசவள்ளி, வற்றாளை, பனங்கிழங்கு போன்றவற்றையும், தூதுவளை, பசளி, முசுமுசுக்கைக்கீரை போன்ற கீரை வகைகளையும் பயன்படுத்தி தயாரிக்கப்படக்கூடிய சத்துள்ள உணவுவகைகள் பற்றி இந்நூல் மீளவும் அறிமுகப்படுத்துகின்றது. இந்நூலில் அவ்வணவுகளை எவ்வாறு தயாரித்துக்கொள்ளலாம் என்ற செய்முறையை அறிந்துகொள்ளமுடிகின்றது. இந்நூலாக்கக் குழுவில் மருத்துவபீட மாணவர்களான குழு 2இன் இருபத்தியொரு பேர் செயலாற்றியிருக்கின்றனர். வடமாகாண சுகாதார அமைச்சு 2016இல் நடத்திய வடமாகாண ஆரோக்கிய விழாவையொட்டி வெளியிடப்பட்ட பிரசுரங்களில் இதுவும் ஒன்று.