வேதா இலங்காதிலகம். முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், விசுவமடு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி).
xvi, 161 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 19×13 சமீ., ISBN: 978-955-4096-20-2.
யாழ்ப்பாண மாவட்டத்தின் கோப்பாய் கிராமத்திலிருந்து டென்மார்க்குக்குப் புலம்பெயர்ந்து அங்கு ஓஹ{ஸ் நகரில் வாழும் கவிஞர் வேதா இலங்காதிலகம் படைத்த பெற்றோரியம் சார்ந்த வாழ்வியல் அணுகுமுறைகளின் தொகுப்பு. பிள்ளை வளர்ப்புப் பற்றிய குறுங்கட்டுரைகளின் வாயிலாக தேவைப்படுமிடத்து தன் அனுபவத்தையும் இணைத்து மிக எளிமையாகப் பல கருத்துகளை வாசகர்களிடம் கொண்டுசேர்க்கிறார். பிள்ளைகள் காயப்படுகிறார்கள், உங்கள் சிரிப்பு மிக முக்கியமானது, தொட்டிற் பாடல், மோகன முறுவலில் மயங்காதார் யார், கைத்தொலைபேசியைப் பூட்டுங்கள், பாலுக்குப் பதிலாகக் கோலாவா?, இப்படித்தான் வாசிப்புத் தொடக்கப்படுகிறது, இரட்டைக் கட்டில், நீங்கள் ஒழுங்கானவரா? பயணப்பொருட் பட்டியல், காலையுணவின் முக்கியத்துவம், இப்படி ஏசுகிறீர்களா என இன்னோரன்ன தலைப்புகளில் இவ்வாலோசனைக் குறிப்புகள் ஏராளமாக இந்நூல்வழியாக வழங்கப்பட்டுள்ளன. 1976இல் இலங்கை வானொலியின் பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரிக்குக் கவிதையொன்றை எழுதித் தன் இலக்கியப் பயணத்தைத் தொடங்கியவர் வேதா. இது இவரது நான்காவது நூல். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 63697).