உள்ளூராட்சி மறுசீரமைப்பு வேலைத்திட்டம். கொழும்பு 02: உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு, இல.330, யூனியன் பிளேஸ், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).
36+38 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
உள்ளூராட்சி மன்றங்களின் சகல நடவடிக்கைகளும் அதன் அலுவலகத்தை மையமாகக்கொண்டு மேற்கொள்ளப்படுகின்றன. எனவே குறித்த பணிகளை வினைத்திறனுடனும் உற்பத்தித் திறனுடனும் நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது அலுவலகத்தின் பொறுப்பாகும். இவ்விடயத்தில் அலுவலக முகாமைத்துவம் முக்கியத்துவம் பெறுகின்றது. உள்ளூராட்சி மன்றங்களின் அலுவலக முகாமைத்துவம் சம்பந்தமான பல யோசனைகளை உள்ளூராட்சி மறுசீரமைப்பு பற்றிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சமர்ப்பித்துள்ளது. இவற்றைக் கவனத்திற்கொண்டு தயார் செய்யப்பட்டுள்ள இக்கைந்நூலை உள்ளூராட்சி மையங்களின் அலுவலக முகாமைத்துவம் பற்றிய பொழிப்பு வழிகாட்டியாகப் பயன்படுத்த முடியும். தமிழ் சிங்களம் என இருமொழிகளில் பிரசுரமாகியுள்ள இந்நூலின் 36 பக்கங்கள் தமிழுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் சுன்னாகம்; பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 19101).