இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, இல. 30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (கொழும்பு: பிரின்ட் கெயார் யுனிவேர்சல் லிமிட்டெட், 77, நுன்கமுகொட வீதி, களனி).
(28), 316 பக்கம், 151 அட்டவணைகள், விலை: ரூபா 500.00, அளவு: 27.5×20.5 சமீ., ISBN: 978-955-575-364-7.
இலங்கை மத்திய வங்கியின் 68ஆவது ஆண்டாக வெளியிடப்படும் இவ்வறிக்கை எட்டு பகுதிகளாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம், விலை மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாடு தோற்றப்பாடு மற்றும் கொள்கைகள், தேசிய உற்பத்தி செலவினம் மற்றும் வருமானம், பொருளாதாரம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு, விலைகள், கூலிகள், தொழில்நிலை மற்றும் உற்பத்தித்திறன், வெளிநாட்டுத்துறை அபிவிருத்திகளும் கொள்கைகளும், இறைக் கொள்கைகளும் அரச நிதியும், நாணயக் கொள்கை, வட்டி வீதங்கள், பணம் மற்றும் கொடுகடன், நிதியியல்துறை செயலாற்றமும் முறைமை உறுதித் தன்மையும் ஆகிய விடயங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன. மேலும் புள்ளிவிபரப் பின்னிணைப்பு, சிறப்புப் புள்ளிவிபரப் பின்னிணைப்பு ஆகியனவும் காணப்படுகின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 8645P).