நினைவுக்குழு. யாழ்ப்பாணம்: ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சன் நினைவுக் குழு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2017. (யாழ்ப்பாணம்: தேவி பிரின்டர்ஸ், 140/1, மானிப்பாய் வீதி).
(4), 119 பக்கம், வண்ணச் சித்திரங்கள், கருத்தோவியங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
எதிர்காலத்தில் நடக்கக்கூடிய நிகழ்வுகளை துல்லியமாகக் கணித்துத் தன் கருத்தோவியங்களின் வாயிலாக ஊடகங்களில் வெளிப்படுத்திவந்தவர் பற்றிக் அல்பேட் அஸ்வின் சுதர்சன் என்ற ‘அஸ்வின்’. அஸ்வின் பற்றிய நினைவுப் பதிகையாகிய இம்மலரில் அவரைப் பற்றிய பலரின் மனப்பதிவுகளுடன், அத்தகைய தீர்க்கதரிசனம் மிக்க கருத்தோவியங்களையும் இந்நினைவிதழ் ஆவணப்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்த அஸ்வின் ஊடகத்துறையில் இணைந்து சுடரொளி, வீரகேசரி, யாழோசை, தினக்குரல் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியவர். 2011ஆம்ஆண்டு இலங்கைப் பத்திரிகை நிறுவனத்தினால் பத்தி எழுத்துக்களுக்கான சிறந்த பத்திரிகையாளர் விருதைப் பெற்றவர். குறும்படத்தயாரிப்புகளிலும் நாட்டம் கொண்டவர். குடும்பத்திற்காக பொருளாதார வளம் தேடி மேற்கு ஐரோப்பாவுக்குப் புலம்பெயர்ந்த வேளையில் உக்ரெய்ன் நாட்டில் 22.09.2016 விபத்துக்குள்ளாகி மரணமானார்.