தா.சனாதனன், அ.தேவரூபன். யாழ்ப்பாணம்: கலை வட்டம், நுண்கலைத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, மே 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
56 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 19.5×19 சமீ.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைக்கூடத்தில் 9-18 மே 2018 காலப்பகுதியில் நடைபெற்ற சுலைமான் ஆச்சியின் Puni(Interlace) Exhibition of Reed Mats கண்காட்சியின்போது வெளியிடப்பெற்ற விளக்கக் கைந்நூல். அ.தேவரூபன் அவர்களின் ‘புனி: மட்டக்களப்பு பன் பாய்களின் சமூக அழகியல்’ என்ற அறிமுகக் கட்டுரையில் பன் பாய்களின் பண்பாட்டுப் பின்னணி, பன் பாய்களின் உற்பத்தி வரலாறு, உற்பத்தியில் பாய், பன் பாய்கள்: வகைகளும் வடிவமைப்பும், முடிவுரை என்றவாறாக விளக்கியுள்ளார். இக்கட்டுரை ஆங்கிலத்தில் ‘Puni: The Culture of the Pan Grass mat in Mattakkalappu’ என்ற தலைப்பில் கீதா சுகுமாரன் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார்.