13530 ஓவியக் கொள்கைகளும் ஓவியர்களும்.

சோதிலிங்கம் கோகிலன் (கோகில்). கோப்பாய்: நுண்கலை மன்றம், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, 2006. (இணுவில்: கோகில் ஸ்கிரீன்ஸ், செல்வகம், இணுவில் கிழக்கு).

viii, (4), 94 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.

இந்நூலில் வெளிப்பாட்டுவாதம், மனப்பதிவு வாதம், கனவடிவ வாதம், டாடாஇசம், சர்ரியலிசம், அரூபவாதம், மனரிசம், பேவிஷம், அரூபவெளிப்பாட்டு வாதம், உருவவாதம், உண்மை நிலை, எதிர்கால வாதம், கியூமானிஷம், விஞ்ஞானரீதியான இயற்கைத் தன்மை, ஓவியர்களும் பின்பற்றிய கொள்கைகளும் ஆகிய 15 இயல்களில் பல்வேறு ஓவியம் சார்ந்த கொள்கைகளையும் அவற்றை உருவாக்கிய ஓவியர்களையும் பற்றிய தகவல்களையும் காணமுடிகின்றது. கோப்பாய், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி முகிழ்நிலை ஆசிரிய மாணவரான சோ.கோகில் இந்நூலை சித்திரக்கலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் எழுதி வழங்கியுள்ளார். (இந்நூல் சுன்னாகம்; பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 15652).

ஏனைய பதிவுகள்

14565 அவளும் நானும்: தேரந்த கவிதைகள்.

மாதவி உமாசுத சர்மா. யாழ்ப்பாணம்: தேசிய கலை இலக்கியப் பேரவை, 62, காங்கேசன்துறை வீதி, கொக்குவில் சந்தி, கொக்குவில், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு). xvi,

16351 காலனிய ஊர்காவற்றுறையின் கட்டடக் கலை.

பிரிந்தா குலசிங்கம். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 190 பக்கம், விலை: ரூபா 600.,

14440 தமிழ் மொழி கற்போம் (முதலாம் பகுதி) பேச்சுத் தமிழ்.

ஆசிரியர் குழு. ராஜகிரிய: இனவிவகார, தேசிய நல்லிணக்க, கனிப்பொருள் வள, அபிவிருத்தி அமைச்சு, அரசகரும மொழிகள் திணைக்களம், பாஷா மந்திரய, 347/7, கோட்டே வீதி, 1வது பதிப்பு, 2001. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்,