13536 கலாபூஷணம் சைவப்புலவர் சு.செல்லத்துரையின் வில்லிசைப் பாடல்கள்.

 சு.செல்லத்துரை. தெல்லிப்பழை: தெல்லிப்பழைக் கலை இலக்கியக் களம், 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: கணபதி அச்சகம், 54/2, தலங்காவல் பிள்ளையார் கோவிலடி, திருநெல்வேலி).

xxiv, 183 பக்கம், தகடு, விலை: ரூபா 300., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-7973-05-0.

இந்நூலில் கலாபூஷணம் சு.செல்லத்துரை அவர்களின் 23 வில்லிசைப் பாடல்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. தெல்லிப்பழை இலக்கியக்களமும், திருவாவடுதுறை ஆதீன சைவசித்தாந்தப் பயிற்சி மையமும் இணைந்து நடத்திய சைவப்புலவர் சு.செல்லத்துரையின் அமுதவிழாவும், அமரர் சிவகாமசுந்தரி செல்லத்துரையின் பவளவிழா நினைவும், எட்டாம் ஆண்டு நினைவும் இடம்பெற்ற வேளையில் 08.04.2018 அன்று இந்நூல் வெளியிடப்பட்டது. இதில் விபுலானந்த அமுத வெள்ளம், மெய்ப்பொருள், மெய்கண்டார், நாவலர் பெருமான், தன்வினை தன்னைச் சுடும், தீதும் நன்றும் பிறர்தர வாரா, கோவலன் பிரிவு, கண்ணகி வழக்குரை, கற்புக்கனல், பத்தினித் தெய்வம், எல்லோர்க்கும் கல்வி, சேர்ந்தாரைக் கொல்லும் சினம், மாற்றுவலுவுடையோரை மதிப்போம், செய்ந்நன்றி கொன்றார்க்கு உய்வில்லை, சங்கம் தந்த அகத்திணை மரபு, நோதலும் தணிதலும், மங்கையர் மாண்பு, மாதவி மாண்பு, அறநெறி கற்போம், கல்விக் கண், மானம் காத்த மன்னர்கள், சமநீதியே சரிநீதி, பூம்பாவை ஆகிய 23 வில்லிசைப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்