க.சச்சிதானந்தன். யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம், கல்வித் திணைக்களம், 1வது பதிப்பு, ஆவணி 1996. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி).
ix, 37 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 60.00, அளவு: 22×14 சமீ.
பண்டிதர் க.சச்சிதானந்தன் 1921இல் காங்கேசன்துறையில் பிறந்தவர். லண்டன் பல்கலைக்கழகத்தின் முதுகலைமாணிப் பட்டம் பெற்றவர். பலாலி ஆசிரியர் கலாசாலையில் உளவியல் விரிவுரையாளராகப் பணியாற்றிய இவர் ஒரு மதுரைப் பண்டிதருமாவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு இலக்கிய கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்துள்ளது. பண்டிதர் சச்சிதானந்தனின் தமிழரின் நரம்பிசைக் கருவிகளுள் முக்கியமானதாகக் கருதப்படும் யாழ் இசைக்கருவி பற்றிய ஆய்வு நூல் இதுவாகும். தமிழர் யாழியல், தமிழக யாழ்களும் அவற்றின் அமைப்பும் ஆகிய இரு பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அமரர் இ.சிவானந்தன் அவர்களின் நினைவாக இந்நூல் வெளியிடப்பட்டது. பின்னிணைப்பாக அமரர் இ.சிவானந்தன் அவர்கள் பற்றியதாக ‘ஆளுமையின் மறுபாதி’ என்ற தலைப்பில் பிரதிக் கல்விப்பணிப்பாளர் நா.சுந்தரலிங்கம் அவர்கள் எழுதிய கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 119695).