மு.குமாரசிங்கம் (தொகுப்பாசிரியர்), செ.சிவப்பிரகாசம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: செ.சிவப்பிரகாசம், திருவருளகம், தாவடி, கொக்குவில், 1வது பதிப்பு, 1977. (யாழ்ப்பாணம்: உமாதேவி அச்சகம், தாவடி, கொக்குவில்).
xvi, 50 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×13 சமீ.
திருக்கேதீச்சரப் பதிகங்களுக்கான இப்பண்சுர அமைப்பினை தமிழகத்தில் திருநெல்வேலி ஜில்லா, குலசேகரன் பட்டணம் தேவார வித்துவான் இ.சுப்பிரமணிய ஓதுவாமூர்த்தியின் சகோதரரும், பெருங்குளம் சங்கீத வித்துவான் வா.ஸ்ரீநிவாச ஐயங்கார் அவர்களின் மாணாக்கருமான இசைப்பேரறிஞர் இ.அப்பாசாமி ஓதுவாமூர்த்தி அவர்கள் உருவாக்கியிருந்தார். அவரது சீடரும் இளைப்பாரிய பொது வேலைப்பகுதி பரிசோதகருமான (P.W.D.Inspector) மு.குமாரசிங்கம் அவர்கள் தொகுத்திருக்கின்றார். இந்நூலுக்கு அணிந்துரையை பணடிதமணி சி.கணபதிப்பிள்ளை வழங்கியிருக்கிறார். அவர் தமதுரையில், ‘திருமுறைப் பண் சுர அமைப்பில் சப்த சுரங்களும் இராகம் செய்து உபகரிக்கின்றன. இதனால் எந்தப் பண்ணுக்கு எந்த இராகம் என்பதை இரண்டின் சூக்கும தூல சம்பந்தம் அறிந்தவரே அறிவர். இந்தப் பண்ணும் இராகமும் ஒன்றுபட்டு இனிது நடப்பதற்கு உபகாரமாக இருப்பது நடை. இந்நூலிலே பண்ணும் இராகமும் நடை அமைவும் பலப்படும்படி சுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன’ என்று குறிப்பிடுகிறார்.