செ.கண்ணதாசன். சுழிபுரம்: பொன்னாலை சந்திர பரத கலாலயம், இல.9, பறாளாய் வீதி, 2வது பதிப்பு, 2017, 1வது பதிப்பு, 2009. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி).
ix, 34 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×14 சமீ., ISBN: 978-955-51696-0-8.
நூலாசிரியர் வைத்திய கலாநிதி செ.கண்ணதாசன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட சிரேஷ்ட விரிவுரையாளராவார். இவர் அவ்வப்போது பொன்னாலை சந்திர பரத கலாலய நடன நிகழ்வுகள், தமிழ்த்தினப்போட்டிகள், திருமதி பங்கயற்செல்வி முகுந்தன் அவர்களின் இசைக்கச்சேரிகள் போன்றவற்றுக்காக எழுதிய சங்கீத இசைப்பாடல்களின் தொகுப்பு இதுவாகும். (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது).