க.ப.சின்னராசா (இயற்றியவர்), தவநாதன் றொபேட் (ஸ்வர அமைப்பு). சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2005. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்).
85 பக்கம், விலை: இந்திய ரூபா 50.00, அளவு: 12×18.5 சமீ.
ஈழத்தின் மூத்த மிருதங்க வித்துவானான க.ப.சின்னராசா அவர்களின் 55 பல்லவிகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. இந்தப் பல்லவி ஆக்க நூலில், பல தாளப் பல்லவிகள், திரிகாலப் பல்லவிகள், கதி அமைந்த பல்லவிகள், இராக பேதம் அமைந்த பல்லவிகள், ஜதி அமைந்த பல்லவிகள், க்ரகம் அமைந்த பல்லவிகள் எனப் பலவும் அடங்கியுள்ளன. 55 பல்லவிகளும் ஸ்வர சாஹித்தியங்களாகவும் ஜதிக்கோர்வைகளாகவும் ஒவ்வொன்றையும் தெளிவாக ஆசிரியர் ஆக்கியுள்ளார். இப்பல்லவிகள் இசைத்தட்டாகவும் பாடி இணைக்கப்பெற்றுள்ளன. நூலாசிரியர் க.ப.சின்னராசா அவர்கள் யாழ்.கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் மிருதங்க வாத்தியத்தைக் கற்பிப்பதுடன் நடன நிகழ்ச்சிகளுக்கும் ஜதிக் கோர்வைகளை அமைத்துக் கொடுத்து இசை நடன மிருதங்க அறிவை மாணவர்களுக்கு ஊட்டிவருபவர்.