13548 இலங்கையிலும் தமிழகத்திலும் கதாப்பிரசங்கக் கலை.

சின்னத்தம்பி ஸ்ரீதயாளன். சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2017. (சென்னை 94: ஆதிலட்சுமி கிராஃபிக்ஸ்).

xxiv, 152 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 110.00, அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-38294-0-5.

கதாகாலட்சேபம், ஹரிகதை ஆகிய பெயர்களில் வழங்கப்பட்ட கதாப்பிரசங்கக்கலை பற்றி இந்நூல் விரிவாகக் கூறுகின்றது. மணி பகவதர் போன்றவர்களால் இலங்கையில் பக்திரச புராணக்கதைகள், இதிகாசக் கதைகள் எவ்வாறு ஆலயங்களில் பக்தரைக் கவர்ந்துவந்தன என்று விளக்கும் ஆசிரியர், இக்கலையில் பல்வகைப்பட்ட இசைப்பாடல்களின்  வகிபாகம், பேச்சாற்றல், நாவலர் கால பக்தி நிகழ்வுகள், சங்கீத மும்மூர்த்திகள் இட்டுச் சென்ற  இசைத்துறைக்கான அடித்தளம் என்பன பற்றியும் விளக்கியிருக்கிறார். இக்கலையின் முன்னோடிகளான குப்பிளான் செல்லத்துரை, மணிபகவதர் (சீ.எஸ்.எஸ்.மணி ஐயர்), பிரசங்க மாமணி சித்தவைத்தியர் சிவ அன்பு, பண்டிதர் வடிவேல், கல்லடி வி.சாம்பசிவக் குருக்கள், நல்லூர் தமிழ்மணி கணேசசுந்தரம், கொக்குவில் புலவர் குமாரசாமிப்பிள்ளை, அளவெட்டி வர்ணகுலசிங்கம் வட்டுக்கோட்டை சங்கர சுப்பையர் எனப் பல ஆளுமைகளின் பணிகளை பட்டியலிட்டிருக்கிறார். சைவாலயங்களில் கதாகாலட்சேபம், இலங்கையில் சாஸ்திரியபூர்வமான தமிழ்ப் பிரசங்கங்கள், ஹரி கதையின் தோற்றம்,  தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் அதன் வளர்ச்சி, நாவலர் பெருமானும் சைவப்பிரசங்கமும் என பல தகவல்கள் இங்கு பதிவுக்குள்ளாகியுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62443).

ஏனைய பதிவுகள்

Casino Tillägg Utan Omsättningskrav 2024

Content Onlinecasino Tillsammans Snabba Insättningar Samt Uttag Att Givetvis Någon Tilläg Villig Casino Utan Bankid Bonussystemet Generösare Kungen Utländska Casinon Saken där svenska språket marknaden

17532 கருக்குகள்.

சு.கருணாநிதி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, கார்த்திகை 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 44 பக்கம், விலை: ரூபா 200.,