13551 ஆற்றுகை-நாடக அரங்கியலுக்கான இதழ்: களம் 1, காட்சி 1, ஒக்டோபர்-டிசெம்பர் 1994.

ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, டிசெம்பர் 1994. (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், குருநகர்).

48 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 20.00, அளவு: 20.5×15 சமீ.

‘ஆற்றுகை’ இதழ் திருமறைக் கலாமன்றத்தினரின் நாடக அரங்கவியல் காலாண்டு இதழ். இதன் முதலாவது இதழ் 1994ஆம் ஆண்டு ஐப்பசி-மார்கழி இதழாக வெளிவந்தது. இவ்விதழில், தேவையும் நோக்கமும், ஆசிகள்: கலை வழி இறை பணி (நீ. மரியசேவியர்),

பண்பாடும் பாரம்பரியக் கூத்துக்களின் பயன்பாடும் (குழந்தை ம.சண்முகலிங்கம்),

நாட்டுக் கூத்துக் கலைஞருடன் ஒரு பொழுது (அண்ணாவியார் அ. அருளப்பு),  சிங்கள அரங்கில் தமிழ் நாடகப் பாரம்பரியத்தின் செல்வாக்கு (தமிழில் : யோ.அன்ரனி யூட்), நூல் நுகர்வு (மனோரஞ்சனி அல்பிரட்), விமர்சனம்: நாமிருக்கும் நாடு நமதே (பு. வதனன்), விமர்சனம்: ஒரு தேடல் (வி. எம். ஜெறாட்), நிகழ்வும் பதிவும் (ம.போ.ரவி -தொகுப்பு),’ஒற்றுமையே பலம்’-சிறுவர் நாடக எழுத்துரு (யோ.யோண்சன் ராஜ்குமார்) ஆகிய ஆக்கங்கள் முதலாவது இதழை அலங்கரித்துள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 007601).

ஏனைய பதிவுகள்

Tips Play On line

Content Several Position Games Legal Sports betting In the U S What’s the Better Internet casino Within the Pennsylvania? Bally’s is one of the most

12280 – பசுமை:உலக சூழல்தின சிறப்பிதழ் 2001.

மலர்க் குழு. கொழும்பு 4: கொழும்பு இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, ஜுன் 2001. (கொழும்பு: ஏ.எஸ்.சற்குணராஜா, எஸ்.பிரின்ட்). ix, 120 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ. கொழும்பு இந்துக்

9111 அருளாளர் அந்தோனியார்.

வாகரைவாணன் (இயற்பெயர்: ம.அரியரத்தினம்). மானிப்பாய்: வாகரைவாணன், பழனம், உடுவில் தெற்கு, உடுவில், 1வது பதிப்பு, ஆனி1993. (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், 89, மவுண்ட் கார்மல் வீதி, குருநகர்). v, 26 பக்கம், சித்திரங்கள், விலை: