13554 ஆற்றுகை-நாடக அரங்கியலுக்கான இதழ்: களம் 3, காட்சி 1, ஜனவரி-மார்ச் 1997.

ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, மார்ச் 1997. (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், மவுன்ட் கார்மேல் வீதி, குருநகர்).

52 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 25.00, அளவு: 20.5×15 சமீ.

திருமறைக் கலாமன்றத்தினரின் நாடக அரங்கவியல் காலாண்டு இதழ். இவ்விதழில், தேடலும் வெளியீடும் (ஆசிரியர் குழு), அரங்க நோக்கில் வேட்டுவ வரி (என்.நவதர்சினி), புதைக்கப்பட்டவன் நான்-தார்சீசியஸீடன் நேர்காணல் (மு.புஷ்பராஜன்), பாரம்பரிய கலைகளில் ஒரு பொக்கிசம்-கலாவினோதன் சின்னமணியின் மணிவிழாவையொட்டிய சிறு குறிப்பு (பா.இரகுவரன்), குரலசைவே உடலசைவாக: இசை நாடக அரங்கியலுக்கான திறப்புரை (பா.அகிலன்), சிங்கள அரங்கின் பிதாமகர்: பேராசிரியர் எதிர்வீர சரத்சந்திர (ஜே.ஜே.ராஜ்குமார்), நிகழ்வும் பதிவும் (யே.இக்னேஷியஸ்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 018429).

ஏனைய பதிவுகள்

14324 அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கான அரசாங்க ஆலோசனைகள்.

இலங்கை அரசாங்கம். கொழும்பு: நீதி, அரசியலமைப்பு அலுவல்கள், இன அலுவல்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1997. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களம்). vi, 259 பக்கம், அட்டவணைகள்,

17700 மாசுறு பேறு: சிறுகதைகள்.

ஸ்ரீலேக்கா பேரின்பகுமார். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஐப்பசி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 120 பக்கம், விலை: ரூபா 650., அளவு:

15854 யாழ்ப்பாணச் சரித்திரத்தில் நாம்.

கு.சிவகடாட்சம்பிள்ளை, மாவை வரோதயன் (இயற்பெயர்: சிவகடாட்சம்பிள்ளை சத்தியகுமரன்). தெல்லிப்பழை: சிவகடாட்சம்பிள்ளை சத்தியகுமாரன் நினைவு மலர் வெளியீட்டுக் குழு, வலிகாமம் வடக்கு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2009. (யாழ்ப்பாணம்: அகரம் கணனிப் பதிப்பகம், பிரவுண் வீதி,