ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, 1998. (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், மவுன்ட் கார்மேல் வீதி, குருநகர்).
77 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 60.00, அளவு: 25×18.5 சமீ.
திருமறைக் கலாமன்றத்தினரின் நாடக அரங்கவியல் காலாண்டு இதழின் அடுத்ததொரு பரிமாணமாக இருவருடங்களுக்கு ஒரு இதழ் என்ற முயற்சியின் முதலாவது இதழாக 1997-1998ஆம் ஆண்டுக்காலப்பகுதிக்குரிய சிறப்பிதழான இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஈழத்து தமிழ் நாடக விமர்சன மரபு : ஓர் வரலாற்று மீள்பார்வை (ந.நவதர்ஷினி),கல்விசார் அரங்கு (நீ.மரியசேவியர்), பருத்தித்துறைக் கூத்து அரங்கும் அளிக்கையும் பற்றிய அறிமுகம் (பா.இரகுவரன்), குரொட்டோவ்ஸ்கின் பரிசோதனை முயற்சிகளும் அரங்கின் பல்திறன் வீச்சும் (இ.ஜெயரஞ்சினி), நூலகம் (வு.கண்ணன்), சமூகத்தின் அரங்கு (க.சிதம்பரநாதன்), நூல் நுகர்வு: அரங்க விமர்சனம் பற்றி ஓர் அரங்கியல் விமர்சனம் (க. ரதீதரன்), கற்கை நெறியாக அரங்கு திரைகளை விலக்கிச் சில கேள்விகள் (பா.அகிலன்), யாழ்ப்பாணத்தில் காணப்படும் புதிய அரங்க முறைகள் ஒரு நோக்கு (தே.தேவானந்),பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகத்தின் நாட்டுக்கூத்து இசை நாடகப் போட்டி,‘பாத்திரங்கள் என்னைக் கூட்டிக்கொண்டு போனது” குழந்தை ம.சண்முகலிங்கத்துடன் ஓர் நேர்காணல் (பா.அகிலன், N.நவதர்ஷினி), சிங்கள அரங்கில் தமிழ் அரங்கின் தாக்கம் (காரை சுந்தரம்பிள்ளை), ‘நடிகர்களாக அரசியல் வாதிகள்’ (கா.சிவத்தம்பி), யாழ்ப்பாணக் கத்தோலிக்க கூத்து மரபு (யோ.யோ.ராஜ்குமார்) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.