13559 உள்ளொளி பெருக்கும் சிறுவர் அரங்கு.

முத்து இராதாகிருஷ்ணன். திருக்கோணமலை: திருமதி கே.இராதாகிருஷ்ணன், மதுஷா வெளியீடு, 164/1, திருஞானசம்பந்தர் வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2004. (திருக்கோணமலை: ரெயின்போ மினிலாப், 361, நீதிமன்ற வீதி).

128 பக்கம், விலை: ரூபா 200.00, அளவு: 21×14.5 சமீ.

சிறுவர் நாடக எழுத்துருக்கள், கட்டுரைகள், அரங்க விளையாட்டுக்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலின் ஆசிரியரின் முன்னுரையை அடுத்து, குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களின் கருத்துரையும், கடலின் துயரம், பூதம் காத்த புதையல், நரிமேளம் ஆகிய சிறுவர் நாடக எழுத்துருக்களும் இடம்பெற்றுள்ளன. அதனைத் தொடர்ந்து கல்விச் சீர்திருத்தமும் சிறுவர் அரங்கும், வகுப்பறைகளில் சிறார்களின் பிறழ்வு நடத்தைகளும் சிறுவர் அரங்கச் செயற்பாடும், அரங்க விளையாட்டுகளும் சிறுவர் அரங்கும், அரங்கியல் துறையில் பயன்படுத்தப்படும் சிறுவர் அரங்க விளையாட்டுக்கள் ஆகிய கட்டுரைகளும் நூலின் இறுதியில் முடிவுரையும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் சுன்னாகம்; பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13718). 

ஏனைய பதிவுகள்

16511 கண்ணீரில் கரைகிறது காலம்.

கா.தவபாலன் (இயற்பெயர்: காசிப்பிள்ளை தவபாலச்சந்திரன்). முள்ளியவளை: காசிப்பிள்ளை நற்பணி மன்ற வெளியீடு, கணுக்கேணி கிழக்கு, 1வது பதிப்பு, வைகாசி 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை). xx, 104 பக்கம், விலை: ரூபா 400., அளவு: