13560 கல்யாணி 1.

அவைக்காற்றுகைக் குழு. சுன்னாகம்: கல்யாணி, அவைக்காற்றுகைக் குழு, காங்கேசன்துறை வீதி, மருதனாமடம், 1வது பதிப்பு, நொவெம்பர்; 1998. (யாழ்ப்பாணம்: அபிராமி அச்சகம், கொக்குவில்).

46 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

இது நாடக அரங்கியலுக்கான ஒரு வெளியீடு. அவைக்காற்றுகைக் குழு வெளியீடாக 05.11.1998 முதல்; வெளியாகியுள்ள நாடகம் சார் தகவல்கள் கொண்ட பருவ இதழ். அரங்கு, நாடக பாடம் , அரங்கவியலாளர்கள் , நாடகங்கள், நாடக செய்திகள், படங்கள் தாங்கி இந்த இதழ் சுன்னாகத்திலிருந்து வெளியானது. முதலாவது இதழில் மனக்கோலம்,  புனைவுமெய்மையும் நாடகத்தில் நடிப்பும், குழந்தை ம.சண்முகலிங்கனின் நாடகங்களில் ஈழத்து, தமிழ் அரங்கின் தோற்றம், ஓரங்க நாடகமும் நாடகமாடுதலும், செர்ரிப் பழத் தோட்டம், சஞ்சிகை, வழிவழி வந்த வைரங்கள், கனியும் சுமையும் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகளைக் கொண்டது. (இந்நூல் சுன்னாகம்; பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11093).                                                                                                                                                                                                            

ஏனைய பதிவுகள்