சிவானந்தன் வித்தியாதரன். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
20 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 290., அளவு: 21×29 சமீ., ISBN: 978-955-7461-29-8.
சிறுவர்களுக்கேற்றவகையில் விளக்கப்படங்களுடன் சதுரங்க விளையாட்டினை அறிமுகப்படுத்தும் நூல். முற்காலத்தில் ஓர் அரசனின் சேனையில் இருந்த நால்வகைப் படைகளான கோட்டை (Rook), மந்திரி (Bishop), குதிரை (Knight), காலாட்படை (Pawn), இராஜா (King), இராணி (Queen) ஆகிய பாத்திரங்களை உருவகமாக்கி விiயாடப்படுவதே சதுரங்க விளையாட்டாகும். சதுரங்கம் பழைமை வாய்ந்த பிரபலமான உள்ளக விளையாட்டாகும். 32 வெள்ளைக் கட்டங்களும் 32 கறுப்புக் கட்டங்களுமாக ஒரு சதுரங்கப் பலகையில் 64 கட்டங்களுண்டு. இவ்விளையாட்டு 16 வெள்ளைக் காய்களையும், 16 கறுப்புக் காய்களையும் நகர்த்தி விளையாடப்படுகினறது. இவ்விளையாட்டு இற்றைக்கு ஆயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆசியாவில் விளையாடப்பட்டு வருகின்றது. அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா போன்ற நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் சதுரங்கம் பிரபல்யமாக உள்ளது. இந்நூல் 130ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.