தி.திருஷன். யாழ்ப்பாணம்: சுகாதாரக் கல்விசார் தயாரிப்பலகு, சமுதாய மருத்துவத்துறை, மருத்துவபீடம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், ஆடியபாதம் வீதி, 1வது பதிப்பு, 2007. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டர்ஸ், திருநெல்வேலி).
16 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
சிறுவர்களுக்கான சுகாதார அறிவினை வழங்கும் சிறுவர் பாடல்களின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் 4ஆம் ஆண்டு மருத்துவ பீட மாணவரான தி.திருஷன் இந்நூலை தொகுத்து வெளியிட்டுள்ளார். எங்கள் வீடு, ஈரும் பேனும், கண்களைக் காப்போம், காதைப் பேணிக் காத்துக்கொள், வெள்ளை வெள்ளை பற்கள், கையைக் கழுவு சுட்டிப் பயலே, குட்டித்தம்பி தங்கைக்கு அண்ணாவின் அறிவுரைகள், நிறையுணவு, நுளம்புகளை அழிப்போம், புழு காத்திருக்குது, நெருப்புக் காய்ச்சல், சாலை விதிகளை மதி ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள இச்சிறுவர் பாடல்களை மருத்துவபீட மாணவர்களான ல.யனோஜினி, ந.தனஞ்சயன், சே.வரண்பிரசாந், ச.மணிவண்ணன் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்நூலுக்கான படங்களை சி.பிரதீபன் வரைந்துள்ளார்.