எம்.ஸி.எம்.ஸீபைர். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 1967, 2வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
vi, 60 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 175., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-1997-85-4.
கவிமணி எம்.சி.எம்.சுபைர் (1933-1999) கல்ஹின்னை கிராமத்தைச் சேர்ந்தவர். தன் 17ஆவது வயதிலேயே மலர்ந்த வாழ்வு என்ற குறுங் காவியத்தை எழுதியவர். 1960 முதல் 1964 வரை மணிக்குரல் என்ற மாத இதழை மாணவர்களுக்காக வெளியிட்டவர். இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர் இயக்கத் தலைவராகப் பணியாற்றியவர். இந்நூல் அவர் 1967இல் எழுதி வெளியிட்ட குழந்தைக் கவிதைத் தொகுதியின் மீள்பதிப்பாகும். இந்நூலிலுள்ள குழந்தைக் கவிதைகளுக்கேற்ற வகையில் ஓவியர் நிசாம் அவர்களின் சித்திரங்களுடன் உருவாகியுள்ள இந்நூல் 086ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.