யோ.யோண்சன் ராஜ்குமார். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
24 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-7461-26-7.
யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மடத்தின் முத்தமிழ் மன்ற வெளியீடாக செப்டெம்பர் 2013இல் ‘அமைதிப் பூங்கா’ என்ற இதே தலைப்பில் எட்டு சிறுவர் நாடகங்கள் தொகுக்கப்பெற்று வெளியிடப்பட்டிருந்தன. அந்நூலிலுள்ள நாடகங்கள் தனித்தனியாக 2017இல் இலக்கியன் வெளியீட்டக வெளியீடாக கொழும்பு குமரன் புத்தக இல்லத்தினால் வெளியிடப்பட்டிருந்தது. அவ்வகையில் வெளியாகியுள்ள சிறுவர் நாடகம் இதுவாகும். இந்நூல் 127ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. நூலாசிரியர் யாழ். திருக்குடும்ப கன்னியர்மட ஆசிரியரும் திருமறைக் கலாமன்றத்தின் பிரதி இயக்குநருமாவார்.