13588 இளந்தளிர்: சிறுவர் கதைகள்.

எம்.ஐ.எப்.ஆயிஷா, என் உமைர் அகமட், எம்.ஆர்.என்.ஸிக்ரா, ஆர்.எம்.யூஸீப். வத்தளை: மேமா/கள/சஹீரா மகா வித்தியாலயம், இணை வெளியீடு, கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

20 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 29.5×21 சமீ., ISBN: 978-955-7461-19-9.

மேல் மாகாணத்தில், களனி கல்வி வலயத்தின்கீழ், வத்தளையில் இயங்கும் சஹீரா மகா வித்தியாலய  நான்காம் தர வகுப்பு மாணவர்களின் சிறுவர் கதை ஆக்கங்கள் நான்கு இந்நூலில் இடம்பெற்றுள்ளன. எம்.ஆர்.நூறுல் ஸிக்ரா எழுதிய ‘எலியின் விபரீத ஆசை  என்ற கதையும், ஆர்.எம்.யூஸீப் எழுதிய ‘நேர்மையான சிறுவன்’ என்ற கதையும், எம்.ஐ.எப்.ஆயிஷா எழுதிய ‘நல்ல நண்பர்கள்’ என்ற கதையும், என். உமைர் அகமட் எழுதிய ‘திருந்திய உள்ளம்’ என்ற கதையும் இடம்பெற்றுள்ளன. மாணவர்களின் கைவண்ணத்தில் கதைகளுக்கான சித்திரங்களும் வரையப்பட்டுள்ளன. இந்நூல் 120ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்