செ.கணேசலிங்கன். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
vi, 69 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-1997-67-0.
ஈசாப் கதைகள் புகழ்பெற்றவை. கிரேக்க அடிமை ஈசாப் என்பவரால் கி.மு. 6ஆம் நூற்றாண்டில் கூறப்பட்டவை என்பர். ஈசாப் கதைகளில், பறவைகள், விலங்குகளின் வாயிலாக நீதிகள் கூறப்பட்டுவந்துள்ளன. ஒரு மாற்றாக இங்கே விலங்குகளுக்குப் பதிலாக மானிட பாத்திரங்களின் வாயிலாக நீதி புகட்டப்பட்டுள்ளது. சுறுசுறுப்பானவன், பாம்பு…பாம்பு, நாயும் எலும்புத் துண்டும், வாலையாட்டி வாழ்தல், நட்பு, ஆற்றில் கோடரி, வலை வீசாமல் மீன் கிடையாது, ஊர் வம்பு, மூளை இல்லாதவன், வாய்மை, கோவில் மணி, அழகான கால்கள், சுயபுத்தி இல்லாதவன், திருட்டும் தண்டனையும், தங்கக் கட்டியும் செங்கல்லும், பலசாலி யார்?, பணக்காரர் நட்பை நம்பாதே, பகுத்தறிவு, மதில்மேல் மாலதி, குரங்காட்டி மனிதன், குற்றம் குற்றம்தான், பறவையும் மிருகமும், புறங்கூறல் கூடாது, நாணயமும் தொழிலும், வாய்ச்சொல் வீரன், கலங்கிய தண்ணீரும் கண்ணீரும், அடிமை நாய், முதுமைக் காலம், பலவான் பலராமன், எட்டாத பழம் புளிக்கும், உழைப்பும் பயனும், திருட்டுத் திருட்டு தான், பசுமைப் பாதுகாப்பு, ஏமாறாதே ஏமாற்றாதே ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 34 கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்நூல் 068ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.