லோ.விஜேந்திரன். யாழ்ப்பாணம்: புகழ் பப்ளிக்கேஷன்ஸ், வராகி அம்மன் கோவிலடி, கொக்குவில் மேற்கு, 1வது பதிப்பு, ஜுன் 2013. (கொழும்பு 13: தேவி பிரின்டர்ஸ்).
viii, 112 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ.
இந்நூலாசிரியர் லோகநாதன் விஜேந்திரன், யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை உயரப்புலம் மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் ஆசிரியராவார். இந்நூலில் பட்டமும் நூலும், தோட்ட வேலியும் ஓட்டையும், இரண்டு ஓநாய்கள், காளை மாட்டைச் சுமந்த சிறுவன், இரண்டு சிறுவர்கள், சோம்பேறி வானம்பாடி, ராசாவின் குதிரையும் மந்திரியும், கோடரியும் மரம் வெட்டியும், கறுப்பு பலூனும் கறுத்தப் பையனும், கோழிக் குஞ்சுகளும் பருந்துக் குஞ்சும், சோக்கிரட்டீசும் இளைஞனும், குரங்குப் பிடி, குழந்தைகள் பெறுவதும் தருவதும், குருவும் சீடர்களும், முதியவரும் சிறுவனும், ராஜாவும் மந்திரியும்-மாத்தியோசி, சிறிய செயல்கள் பெரிய விடயங்கள், உங்கள் வெற்றியிலும் வேகத்திலும் திருப்தி கொள்ளாதீர்கள், பேய்களும் ஆவிகளும் நாங்களும், யார் அழகு, கர்வம், நீச்சல் தெரியாத நாய், தங்கத் தூண்டில், பாதிரியாரும் பண்ணையும், கடவுளின் உதவி, மதங்களும் நாங்களும், முதலையும் சிறுவனும், தளபதியும் நாணயமும், கராத்தேயும் கையில்லாச் சிறுவனும், நண்டுகளின் தீர்மானம், இந்த நிலையும் மாறிவிடும் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 31 கதைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53468).