ப.நிகிலா (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
40 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 230., அளவு: 29.5×20.5 சமீ., ISBN: 978-955-7461-18-2.
சிறுவர்களுக்கான நீதிக்கதைகளின் தொகுப்பாக வெளிவரும் இந்நூலில் எமக்கு அதிகம் பரிச்சயமான சிங்கமும் சுண்டெலியும், குரங்கும் பூனைகளும், சிங்கமும் கரடியும், எறும்பும் புறாவும், நரியும் கொக்கும், பேராசை கொண்ட நாய், புத்திகெட்ட சிறுவன், தொப்பி வியாபாரியும் குரங்குகளும், நீல நரி, குரங்கும் முதலையும், பொன்னாசை, விறகுவெட்டியும் கோடரியும், நரியும் ஒட்டகமும், குறும்புக்கார குரங்கு, யானையின் கோபம், முட்டாள் கழுதை ஆகிய சிறுவர்களுக்கேற்ற நீதிபுகட்டும் கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இந்நூல் 119ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.