13595 செல்லக்கோழி சேரா: சிறுவர் கதைத் தொகுப்பு.

உ.நிசார் (இயற்பெயர்: H.L.M. நிசார்). மாவனல்லை: பானு வெளியீட்டகம், 70/3, புதிய கண்டி வீதி, 1வது பதிப்பு, 2017. (மாவனல்ல: யுனிக் ஓப்செட் பிரின்டர்ஸ், ஹஸன் மாவத்தை).

32 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 27×21 சமீ., ISBN: 978-955-0503-13-1.

சிறுவர்களுக்கான இலக்கிய ஆக்கங்களைப் படைக்கும் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவராக உ.நிசார் இருக்கிறார். ஏற்கெனவே ஒன்பது சிறுவர் பாடல் தொகுதிகளையும், ஆறு சிறுவர் கதை நூல்களையும் வெளியிட்டவர். இந்த நூல் 9-12 வயதுக்குட்பட்ட சிறுவர் கதை நூலாகும். சிறுவர் வாசிப்புக்கு ஏற்ற சிறந்த மொழிப்பிரயோகம், சின்னச்சின்ன வசனங்கள் ஆகியவற்றோடு கூடிய ஆறு கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. மீண்டும் பறந்த பட்டம், தாய்மை தலைகுனிந்தது, திப்பு மாமா, விளாம்பழங்களுடன் விளையாடிய ஆட்டுக்குட்டிகள், குயிலுக்கும் கூடுகட்டலாம், செல்லக்கோழி சேரா ஆகிய தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன. கதைகள் சிறுவர் உளவியலுக்கும் மன வளர்ச்சிக்கும் ஏற்ற கருப்பொருள்களைக் கொண்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

15848 இந்துமகேஷ் படைப்புலகம்(எனக்கென்றோர் உலகம்).

சின்னையா மகேஸ்வரன். ஜேர்மனி: சின்னையா மகேஸ்வரன், Korn Str 322, 28201 Bremen , 1வது பதிப்பு, தை 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை). 304 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.