13602 தாய்லாந்துச் சிறுவர்களின் நாட்டார் கதைகள்.

பிராசித்-குரோசிங் (மூலப் பதிப்பாசிரியர்), த.கனகரத்தினம்(தமிழாக்கம்). கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச்சங்கம், இல. 7, 57வது ஒழுங்கை ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, டிசம்பர் 1996. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 201 டாம் வீதி).

53 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 60., அளவு: 24.5×18 சமீ., ISBN: 955-9429-02-7.

தாய்லாந்து மொழியில் எழுதப்பட்ட இந்நூல் 1987இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. அந்நாட்டுக் கல்வி அமைச்சின் கீழுள்ள தேசிய கலாசார ஆணைக்குழு அலுவலகம் இந்நூலை மொழிபெயர்த்து வெளியிட்டது. இந்நூலில் இடம்பெற்றுள்ள கதைகள் விலங்குகள், பறவைகள், போன்ற பிராணிகளே பாத்திரங்களாகக் கொண்டமைக்கப்பட்டுள்ளன. பஞ்சதந்திரக் கதைகள், இதோபதேசக் கதைகள், ஜாதகக் கதைகள் போன்று அரிய நீதிகளைப் போதிக்கும் இக் கதைகள் சிறுவர்களுக்கு வாசிக்கச் சுவையானவை. வாசிப்பின்பால் ஆர்வத்தை ஊட்டுவன. இவற்றைக் கருத்திற்கொண்டே மொழிபெயர்ப்பு நூலாக வெளியிட கொழும்புத் தமிழ்ச் சங்கம் தீர்மானித்தது. பின்னாளில் இந்நூலின் இரண்டாவது பதிப்பு, 2016இல் இலக்கியன் வெளியீடாக குமரன் புத்தக இல்லத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலின் மொழிபெயர்ப்பாசிரியர் தம்பு கனகரத்தினம் கல்வி டிப்ளோமா, பாலபண்டிதர் ஆகிய பட்டங்களைப் பெற்றவர். ஆசிரியப் பணியில் 17 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். இலங்கை அரசின் பாடநூல் கல்வி வெளியீட்டுக் குழுவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17163).

தாய்லாந்துச் சிறுவர்களின் நாட்டார் கதைகள்.

பிராசித்-குரோசிங் (மூலப்பதிப்பாசிரியர்), த.கனகரத்தினம் (தமிழாக்கம்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு, 2016, 1வது பதிப்பு, 1996. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

52 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 24.5×17.5 சமீ., ISBN: 978-955-1997-02-1.

இந்நூலில் கர்வம் கொண்ட முயல், மான்குட்டியும் சிங்கமும், காகமும் அடைக்கலங் குருவியும், கோழை மிருகங்கள், நன்றியுள்ள பாம்பு, குருவியும் பருந்தும், உண்மை நண்பர்கள், குரங்கும் வேடனும், எருதும் புலியும், றோசாப்பூவில் ஒரு புழு ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட பத்து தாய்லாந்துச் சிறுவர்களின் நாட்டார் கதைகள் இடம்பெற்றுள்ளன. இந்நூலுக்கான சித்திரங்களை சுதா.ஏ.யேசுதாசன் வரைந்துள்ளார். பன்மொழிப் புலவர் மயிலங்கூடலூர் த.கனகரத்தினம் (1927-2013) அவர்கள் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பாளி, சிங்களம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர். ஆசிரியராகத் தன் பணியை ஆரம்பித்த இவர், இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து ஓய்வுபெற்றவர். இந்நூல் 003ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்