ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல.64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2016. (மட்டக்களப்பு: ஓ.கே.பாக்கியநாதன் அறிஞர் சோலை).
20 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 500., அளவு: 20×22 சமீ., ISBN: 978-955-7654-10-2.
குழந்தைகளுக்கான சின்னக் கதையொன்றினை குழந்தை இயல்போடு எளிய சொற்களில் அருமையான நூலாக வழங்கியுள்ளார். தாய்க் குருவியின் அழுகைச் சத்தத்தைக் கேட்ட பூனை தான் பிடித்து வைத்திருந்த குஞ்சினை குருவிக் கூட்டில் எடுத்துச் சென்று திரும்பவும் வைக்கின்றது. குழந்தைகளுக்கு நீதியைச் சொல்லும் முறை அழகானது, சிறப்பானது. இந்நூலுக்கான சித்திரங்களை த.தனபாலன் வரைந்துள்ளார். இந்நூல் 92ஆவது பிரியா பிரசுரமாக வெளிவந்துள்ளது.