13612 குருவிக்கூட்டின் குறுணிக் கதை.

ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல.64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (மட்டக்களப்பு: ஓ.கே.பாக்கியநாதன் அறிஞர் சோலை).

36 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 600., அளவு: 20×22 சமீ., ISBN: 978-955-7654-06-5.

குச்சிலா வீட்டில் ஒரே பிள்ளை பெரும்பாலான நேரங்கள் அவளுக்குத் தனிமையிலேயே கடந்தன. இயற்கையுடன் தொடர்புகொள்கிறாள், உறவாடுகிறாள். அதன் வழியாகத்தன் தனிமையைப் போக்க முயல்கிறாள். பூந்தோட்டம் ஒன்றை வீட்டில் வைக்கிறாள். அதனை அக்கறையுடன் பராமரிக்கிறாள். அங்கு வரும் பறவைகளும் பூச்சிகளும் அவளுக்கு நட்புவட்டமாகின்றன. குருவிகள் மல்லிகை செடியில் கூடு கட்டுகின்றன. கூட்டில் இரண்டு குஞ்சுகள் பிறக்கின்றன. அவற்றுடன் கிச்சிலாவின் பாசம் எல்லையற்று விரிகின்றது. குழந்தை நிலையைக் கடந்த கட்டிளமை நிலை வரை உள்ள நீட்சி சிறுவர் அடையாளப்படுத்தலுக்கு உட்படுகின்றது. அந்த நீட்சியைப் பிரதிபலிக்கும் சிறுவர் இலக்கியங்கள் எம்மிடம் இல்லாதிருக்கிறது. அவ்வாறான நீட்சியின் உற்றுணர்வோடு ஆசிரியர் இந்த ஆக்கத்தைத் தந்துள்ளார். இயற்கைச் சூழலில் நிகழும் நுண்மையான இயக்கப் பதிவுகளை கூர்மையாக உற்றுநோக்கும் திறன்களைப் பயன்படுத்தி இந்த ஆக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நூலுக்கான சித்திரங்களை சுசிமன் நிர்மலவாசன் வரைந்துள்ளார். இந்நூல் 94ஆவது பிரியா பிரசுரமாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

15037 இதழியல் அடிப்படைகள்.

ஈ.ஆர்.திருச்செல்வம். யாழ்ப்பாணம்: ஈ.ஆர்.திருச்செல்வம், 1வது பதிப்பு, ஜீன் 2016. (யாழ்ப்பாணம்: சிவராம் பதிப்பகம், கல்லூரி வீதி). x, 126 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 16.5×11 சமீ., ISBN: 978-955-43169-0-4. ஈ.ஆர்.திருச்செல்வம், யாழ்ப்பாணம்

Tips Earn During the Slots

Blogs Volatility factor out of online slots | La Cucaracha online slot Just what are “no deposit ports”? What should i look for in an