செ.யோகநாதன். சுவிட்சர்லாந்து: விண்மீன் வெளியீட்டகம், Thunstetten str-52, 4900 Langenthal, 1வது பதிப்பு, 2000. (கொழும்பு 6: எஸ்.பிரின்ட்).
36 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 160.00, அளவு: 22×17.5 சமீ.
இயற்கையை நேசித்து உறவாடும் சுந்தரி என்ற சிறுமி அன்பானவள் இரக்க சுபாவமுள்ளவள். அவள் ‘ன்ளள்கு” என்று இருதடவை உச்சரித்ததும் சிறகு முளைத்த பறக்கும் சக்தி பெற்று விடுகிறாள். அவள் காட்டுக்குச் சென்று பிற தேவதைகளுடன் தொடர்புகொண்டு அவர்களின் உதவியுடன் பல நல்ல பணிகளைச் செய்கின்றாள். சிறுவர்களுக்கான சுவையான நாவல். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 029324).