இயல்வாணன் (இயற்பெயர்: சுப்பிரமணியம் ஸ்ரீகுமரன்). சுன்னாகம்: பத்மாவதி பதிப்பகம், முருகேச பண்டிதர் வீதி, சுன்னாகம் தெற்கு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2017. (சுன்னாகம்: விக்னேஸ் பிரின்டேர்ஸ்),
(8), 48 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150.00,அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-38354-0-6.
1961இல் யூரி ககாரின் விண்வெளிப் பயணம் சென்று அன்றைய சோஷலிச ஒன்றியத்துக்குப் பெருமை சேர்த்தார். 1969 இல் நீல் ஆர்ம்ஸ்ட்ரோங் மேலும் இருவருடன் இணைந்து சந்திரனில் காலடி பதித்தார். எம்மவர்களும் சளைத்தவர்களல்லர். கோவில் குளம் என்று அலைந்து திரிந்த எமது பாக்கியம் பாட்டியையும் விண்வெளிக்கு அனுப்பிவைக்கிறார்கள். பாக்கியம் பாட்டியின் மகன் சத்தியசீலன் தன் குடும்பத்தாரோடு விண்வெளியில் வசித்து வந்ததால் இது சாத்தியமாகின்றது. பாட்டியின் அனுபவங்களே கதையை சுவாரஸ்யமாக நகர்த்துகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 63316).