13622 இராபின்சன் குரூசோ.

டானியல் டிஃபோ (ஆங்கில மூலம்), ந.சி.கந்தையாபிள்ளை (தமிழாக்கம்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

40 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 24×17.5 சமீ., ISBN: 978-955-1997-57-1.

1719இல் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நாவல் இதுவாகும். புயலில் உடைந்துபோன கப்பலில் இருந்து தப்பிய ஒருவன் ஒரு தனித்தீவில் தங்கி மிருகங்களுடனும் பறவைகளுடனும் வாழப் பழகிவிடுகிறான். 28 வருடங்கள் அப்படி வாழ்கிறான். ஒருநாள் மணலில்  மனிதக் காலடிகளை கண்டு அவன் கிலிபிடித்து அலைகிறான். அத்தனை காலமும் தனிமையில் கழித்தவன் இன்னொரு மனித உயிரைக் கண்டு அச்சமடைகிறான். பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்த நாவல் அபாரமான கற்பனைவளம்மிக்கது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. ஈழத் தமிழ் அறிஞர் ந.சி.கந்தையாபிள்ளை (1893-1967) அவர்கள் 1949இல் தமிழ்மொழியில் ‘இராபின்சன் குரூசோ’ என்ற தலைப்பில் எழுதி சென்னையில் பிரசுரமாகியிருந்த இந்நூல் தற்போது, மீள்பதிப்பாக வெளிவந்துள்ளது. இந்நூல் 058ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலுக்கான சித்திரங்களை ஓவியர் ராஜன் வரைந்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

Loki Casino Review

Ravi Critères Proposées De Prime, Encarts publicitaires, Tours Gratuits Au Salle de jeu Loki Players Lost All His Winnings Félin Slots Casino No Deposit Bonus