ம.கோர்க்கி (ரஷ்ய மூலம்), பூ.சோமசுந்தரம் (தமிழாக்கம்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
8 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 120., அளவு: 29.5×21 சமீ.
ஒரு குருவிக் குஞ்சின் கதை இது. குளியலறை மேல் ஜன்னல் வளைவில் குடியிருந்த சின்னு என்ற குருவிக்குஞ்சு தாய் சொல் கேளாதது. தாய் கூறும் உபதேசங்களுக்கும் அறிவுரைகளுக்கும் கட்டுப்படாது, எதற்கும் தானே ஒரு நியாயத்தைக் கற்பித்துக் கொள்ளும். ஒருநாள் கூட்டிலிருந்து தவறி விழுந்து கீழே காத்திருந்த பளுப்புப் பூனைக்கு இரையாகவிருந்தது. தாய்க்குருவி சரேலெனப் பறந்து வந்து பூனையுடன் சண்டையிட்டு, பூனைக்குப் போக்குக்காட்டி, அதே வேளை தன் குஞ்சைப் பறக்கச்செய்து தப்பவைத்தது. பாவம் சண்டையிட்ட தாய்க்குருவியின் வால் தான் பூனைக்குக் கிடைத்தது. முன்னர் மொஸ்கோ ராதுகா பதிப்பக வெளியீடாக வெளிவந்திருந்த இச்சிறுவர் கதை நூலுக்கான ஓவியங்களை யெ.சரூஷின் என்ற ரஷ்ய ஓவியர் வரைந்துள்ளார். இந்நூல் 102ஆவது இலக்கியன் வெளியீடாக மீண்டும் புதுக்கிய பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.