கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
12 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 140., அளவு: 29.5×21 சமீ., ISBN: 978-955-1997-74-8.
காட்டுக்கு உலாவச்சென்ற சிறுமி வழிதவறி அலைந்து மூன்று கரடிகள் வாழும் சிறு வீட்டை அடைகிறாள். அங்கு அவள் கரடிகளின் உணவை உண்டு அயர்வில் அங்கேயே படுத்துவிடுகிறாள். வீடுதிரும்பும் கரடிகள் தமது உணவை உண்ட சிறுமியைப் பிடிக்க முயல்கின்றன. அவள் தப்பிச் செல்கிறாள். இச்சிறுவர் கதை நூலுக்கான ஓவியங்களை யூ.வஸ்னெத்சோவ் என்ற ரஷ்ய ஓவியர் வரைந்துள்ளார். இந்நூல் 083ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.