சிபில் வெத்தசிங்ஹ (சிங்கள மூலம்), சரோஜினிதேவி அருணாசலம் (தமிழாக்கம்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
12 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 175., அளவு: 20×19.5 சமீ., ISBN: 978-955-1997-61-8.
ஆதவனுடைய அப்பா அவனது பிறந்தநாள் பரிசாக ஒரு சின்னச் சிவப்பு மோட்டார் வண்டியை வழங்குகின்றார். நாள் முழுதும் அதில் ஓடிக்களிக்கும் ஆதவன் அதனை இரவானதும் வீட்டுக்குள் பாதுகாப்பாகக் கொண்டுவந்து நிறுத்துவதில்லை. பயத்துடன் வண்டி வீட்டுக்கு வெளியிலேயே இரவில் தனியாகத் தங்க நேர்கின்றது. ஒருநாள் வண்டி இரவில் மிகவும் பயந்து அருகிலுள்ள மரத்தின் துணையுடன் மரத்தில் ஏறிப் படுத்துக்கொண்டது. மறுநாள் தான் விட்ட இடத்தில் வண்டியைக் காணாத ஆதவன் துடிதுடித்துப் போனான். அவனது கவலையைப் பொறுக்காத வண்டியும் பின்னர் கீழிறங்கி வந்து ஆதவனுக்கருகில் நின்றது. அன்று முதல் ஆதவன் வண்டியை இரவில் வெளியே விடுவதேயில்லை. இந்நூல் 063ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலுக்கான சித்திரங்களை சிபில் வெத்தசிங்கவே வரைந்துள்ளார்.