சிபில் வெத்தசிங்ஹ (சிங்கள மூலம்), சரோஜினிதேவி அருணாசலம் (தமிழாக்கம்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
8 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 20×20 சமீ., ISBN: 978-955-1997-62-5.
தாத்தா பாட்டியுடன் இரவு முற்றத்தில் இருந்த சுகுணன், திடீரென்று தன் தாத்தாவிடம் ‘நான் நிலவைக் கடக்கவா?’ என்று புதிர் எழுப்புகின்றான். தாத்தா பாட்டியும் அதிசயித்து இது எப்படி சாத்தியம் என்று வினவுகின்றனர். சுகுணன் ஒரு அகண்ட பாத்திரத்தில் நீரை கொண்டு வந்து முற்றத்தில் வைத்து நீரில் தெரியும் நிலவைக்காட்டி அப்பாத்திரத்தை ஓரெட்டில் கடந்து புத்தி சாதுர்யமாகத் தனது சாதனையை நிலைநாட்டிக்கொள்கிறான். தாத்தா-பாட்டி அவனை மெச்சுகின்றனர். இந்நூல் 064ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலுக்கான சித்திரங்களை சிபில் வெத்தசிங்கவே வரைந்துள்ளார்.